Checkout the dialogues of 96 movie. 96 is a romantic Tamil movie written and directed by C. Premkumar starring Vijay Sethupathi and Trisha, and composed by Govind Vasantha.
SCENE 1
ஜானு
“கேட்கணும்ன்னு நினைச்சேன்… நான் அந்த காலேஜ்ல தான் படிக்குறேன்னு உனக்கு எப்படிதெரியும்?”
ராம்
“இதென்ன கேள்வி… அதெல்லாம் தெரியும்”
ஜானு
“அதான், எப்படி? நீ மெட்ராஸ்ல தானே இருந்த?”
ராம்
“அது அதுக்கு ஆள் வெச்சிருந்தேன். அப்போ உனக்கு எது நடந்தாலும் தெரிஞ்சுடும். எப்பயாவது பார்க்கணும்ன்னு தோணுச்சுன்னா, கிளம்பி தஞ்சாவூர் வந்திடுவேன். நீ காலேஜ்லருந்து வீட்டுக்குபோற வரைக்கும் பின்னாடியே வந்துட்டு, பக்கத்துல வந்தா மட்டும் ஒளிஞ்சுப்பேன். என்ன… நீ எனக்கு பதிலா வேறொருத்தரை பார்த்துட்டுதான் கோவப்பட்டங்கிற விஷயத்தை தவிர, மத்த எல்லா விஷயமும் இந்த அய்யாப்புள்ளைக்கு தெரியும்”
ஜானு
“என்ன தெரியும்? எங்கே, சொல்லு பார்ப்போம். ஏதாவது தப்பு தப்பா ஒட்டடிச்சே….”
ராம்
“உன்னோட 10th மார்க் வந்து 836, உன்னோட 12th மார்க் வந்து 990… நீ உன்னோட பர்த்டேக்கு வாங்குன டிரெஸ்ஸை, என்னோட பர்த்டேக்குபோடுவ. உன்னோட இஷ்ட தெய்வம் முருகன். நான் ஊரைவிட்டுப் போனதும், நீ பாட்டு பாடுறதை நிறுத்திட்ட. உனக்கு தமிழ் லிட்ரேச்சர் படிக்கதான் பிடிக்கும், ஆனா உங்கப்பாஉனக்கு தெரியாம B.Sc., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஃபீஸ் கட்டிட்டுவந்தாரு. அது தெரிஞ்சு, 2 நாள் நீ சாப்பிடாம இருந்த. ஆனா, அந்தாளுக்கு இந்த விஷயம் தெரியவே தெரியாது.”
ஜானு
“ஆங்…?”
ராம்
“இல்ல… அப்பாக்கு தெரியாது, ஆனா எனக்கு தெரியும்ன்னு சொல்லவந்தேன். ஸாரி…”
ஜானு
“ம்ம்…”
ராம்
“1998ல ஒரு தடவை தைஃபாய்டு வந்தது, 2000ல ஒரு தடவை jaundice வந்தது… ரெண்டுமே எக்ஸாமுக்கு முன்னாடி சொல்லி வெச்ச மாதிரிவந்தது. அப்புறம்.. நீ காலேஜ் படிக்கும்போது, உன் பின்னாடி சுருட்டை முடிலாம் வெச்சுட்டு பிரதீப்ன்னு ஒருத்தன்சுத்துனான்ல, வெளங்காத ஒருத்தன். அவனை கூட அடிச்சு, யாரோ ஒருத்தன் வாயெல்லாம் கிழிச்சு ஹாஸ்பிட்டல்ல சேர்த்தாங்கஇல்ல? அது கூட போலீஸ் கேஸ் ஆச்சு, இல்ல? அவனை நான்தான் அடிச்சேன்”
ஜானு
“ஆஆ!”
ராம்
“நான்தான் அடிச்சேன்”
ராம்
“அன்னைக்கு தேதிக்கு, என்னைத் தவிர உன்னை ஒரு 3 பேர் லவ் பண்ணிட்டு இருந்தாங்க. அப்புறம், காலேஜ் annual dayக்கு ஃபர்ஸ்ட் டைமா புடவை கட்டிட்டு வந்த, ராமர் கலர். புடவை அவுந்துடுமோன்னுபயம் ஒரு பக்கம், ஆனா எல்லோரும் உன்னையே பார்க்குறாங்களோன்னு வெட்கம் ஒரு பக்கம். எப்படி இருந்த தெரியுமா?”
ராம்
“அதுக்கப்புறம், உன்னை உன் கல்யாணத்துல தான் நான் புடவையில பார்த்தேன்…. வாடா மல்லி கலர். நீ நினைச்ச மாதிரி, உன் கல்யாணத்துக்கு நான் வந்தேன் ஜானு. கூட்டத்துல ஒரு ஓரமா நின்னுட்டு இருந்தேன்… தாலி கட்டுற வரைக்கும், என்னால இருக்க முடியல… அந்த மண்டபத்துல இருந்து, அந்த சத்தத்துல இருந்து என்னால எவ்ளோ தூரம் போகமுடியுமோ அவ்ளோ தூரம் ஓடிட்டேன்”
SCENE 2
ராம்
“நீ தப்பா நினைக்கலைன்னா, உன்கிட்ட ஒண்ணு கேட்கலாமா…?”
ஜானு
“எம்மாடியோவ்… எங்கே, சொல்லு…”
ராம்
“இல்ல… இங்கேருந்து உன் ஹோட்டல் கொஞ்சம் தூரம். இல்ல, வேணா… வா, போலாம்”
ஜானு
“அடச்சீய், சொல்லு…”
ராம்
“இல்ல… இங்கேருந்து உன் ஹோட்டல் கொஞ்சம் தூரம். என் வீடு இங்கே பக்கத்துலதான் இருக்கு”
ஜானு
“என்னை பத்தி நீ என்ன நினைச்ச, ராம்?”
ராம்
“இல்லல்ல… ஸாரி, ஸாரி… நான் அந்த அர்த்தத்துல சொல்ல, ஜானு. சத்தியமா…. அதான் முன்னாடியே வேணாம்ன்னு சொன்னேன். நம்ம வேணா ஹோட்டலுக்கு போய்டலாம், கேப் புக் பண்ணட்டுமா ”
ஜானு
“இந்த விசுவாமித்திரரை டான்ஸ் ஆடி மயக்குமே…அந்த பொண்ணு பேர் என்ன?”
ராம்
“மேனகா”
ஜானு
“ஆங்… அது கூடவே ரெண்டு இருக்குமே, அது பேர் என்ன?”
ராம்
“ரம்பா, ஊர்வசி”
ஜானு
“ம்ம்… அதுங்க மூணையும் அதே டிரஸ்ல உன்னை நம்பி ஒரு நைட் விட்டுட்டு போலாம்… பெருசா ஒண்ணும் பண்ணிட மாட்ட… பத்திரமா பார்த்துப்ப.”
ராம்
“அது… தாடி, மீசை எடுத்ததால உனக்கு அப்படி தெரியுது”
ஜானு
“ஆங்! எடுக்கலைன்னா மட்டும்?”
ராம்
“அப்போவும் அப்படிதான் இருக்கும்”
ஜானு
“ம்ம்”
Be the first to comment on "96 (Tamil Movie) – Dialogues | Vasanam"