A Poem Inspired From Oru Naalil Vazhkai | காரணத்தின் கைப்பிடியில்

Oru Naalil Vaazhkai Poem Tamil

“காட்டினிலே வாழ்கின்றோம் முட்களின் வலி ஒன்றும் மரணமில்லை” – நா. முத்துக்குமார். காலத்தின் கட்டமைப்பபு இன்பம், துன்பம், வெற்றி, தோல்வி, நம்பிக்கை, துரோகம், வளர்ச்சி, தோய்வு, புன்னகை, அழுகை, அன்பு, வஞ்சம் என்ற காரணிகளை உள்ளடக்கியது. காரணங்கள் காட்டி காலத்தின் கட்டமைப்பில் சுழற்காற்றாய் சுற்றிக்கொண்டு இருக்கிறோம். காரணத்தை கட்டவிழ்த்து கனவுகளை சுமந்து சுதந்திரமாய் பறந்து உயரத்தின் உச்சிக்கு செல் மகிழ்வுடன்.

காரணத்தின் கைப்பிடியில்
சலனங்கள் இல்லாமல் சிரிக்க சிந்திக்கிறாய்
மகிழ முயலாமல் மதி கெட்டு முடங்குகிறாய்
சிந்தையைச் சீர்செய்வது சிரமமென்று சொல்கிறாய்
தேடல்கள் தொடங்க தயக்கமுற்றுத் திரிகிறாய்
உனக்கான நிமிடங்களை உணர்ச்சியற்று பார்க்கிறாய்
மாற்றங்கள் கண்டும் மாற முடியாமல் கிடக்கிறாய்
தைரியம் கொள்ளாமல் தோய்ந்தது தேய்கிறாய்
வரமான வாழ்வை வழியின்றி வாழ்கிறாய்
செம்மையான செயல்களையும் சீர்குலையச் செய்கிறாய்
அழிவின் பாதைக்கு அழையா விருந்தாளியாய் செல்கிறாய்
காரணம்-காரணத்தின் கைப்பிடியில் மாட்டிக் கொண்டதால்
காரணங்கள் கேளாமல் காரணங்களை உடைத்தெறிந்துவிடு
காரணமில்லாமல் களிப்புண்டு காலத்தை வெல்லலாம்
கடலளவு கவலைகள் கொட்டிக் கிடந்தாலும்
பிரபஞ்சத்தில் பஞ்சமில்லாமல் புண்ணகை பூக்கும்
இக்கூற்றுகள் இயல்பாய் நிகழ்ந்திட
காராணமின்றி காத்துக் கிடக்கிறேன்
காரணத்தின் கைப்பிடியில் சிக்கிக் கொள்ளாமல்

Share with:


About the Author

Thasneem
நிஜங்களை நிழலாக்கி, கற்பனைகளை கருவாக்கி, திரைவழியே தென்படும், உணர்ச்சிக் கிடங்குகளில் புதைந்த காவியம் நான்!

Be the first to comment on "A Poem Inspired From Oru Naalil Vazhkai | காரணத்தின் கைப்பிடியில்"

Leave a comment

Your email address will not be published.