இன்றைய உலகில் கணிணியிலும், கைபேசியிலும் படிக்கும் மனிதர்கள் வந்துவிட்டாலும் நல்ல புத்தகங்ளை வாங்கி படிப்பது என்பது குறையாத வாடிக்கையாக இன்றும் உள்ளது. மருந்து மாத்திரைகள் முலம் மருத்துவர் செய்ய முடியாத மருத்துவத்தை கூட ஏன் அர்ச்சனை அபிஷேகம் முலம் கடவுள் குணப்படுத்தாத சில வியாதிகளை, சில கெட்ட பழக்க வழக்கங்களை கூட சிலநேரங்களில் பல நல்ல புத்தகங்கள் எளிமையாக குறைவான நேரத்தில் சரிசெய்துவிடும் என்பதை உணர்ந்தே தெரிவிக்கிறேன்.
சிலநேரங்களில் சில புத்தகங்கள் தரும் சுகத்தை,வலிமையை தன்னம்பிகையை கடவுளால் கூட தர முடிவதில்லை. உறவுகள் மனிதர்கள் நண்பர்கள் என அனைவரும் மாற்றத்திற்க்கு உட்பட்டவர்ளே. எவராயினும் ஒருநாள் மாறுபவரே. மனித மனசு மாற்றத்திற்கு உட்பட்டதே அது இயற்கையின் நியதி கூட. சில புத்தகங்கள் கண்டிப்பாக நமது தனிமையின் நண்பனாக, தன்னம்பிகை தரும் நாயகனாக, அன்பை தரும் காதலியாக, சிறந்த ஆசானாக, வியாதியை குணப்படுத்தும் மருத்துவனாக, கூட இருக்கும் என்பதில் துளியும் எனக்கு சந்தேகமில்லை.
அப்படிதான் நான் ரசித்த ஒரு புத்தகத்தை பற்றி அனைவருக்கும் தெரிவிக்க கடமை பட்டு இருக்கிறேன். அர்த்தமுள்ள இந்துமதம் கண்ணதாசனின் அற்புத படைப்பு அந்த புத்தகத்தை படிக்கும் ோது உலகம் புரிந்தது. என் மனமே வியந்தது. அந்த கவியரசுவின் புத்தகத்தை படித்து வியந்து பிறகு பல நாட்களுக்கு பிறகு வாழ்க்கையில் எனக்கு ஏற்ப்பட்ட சில அர்த்தமற்ற நிகழ்வுகளால் தன்னம்பிக்கை குறைந்த ோதும் வாழ்கை பற்றிய சலிப்பும்,விரக்தியும் ோன்றிய காலம் என்னை விரும்பி தானே என்னிடம் வந்த அற்பூதமான புத்தகம் தான் “ப்ளிஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க”என்ற சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன் வெளியிட்ட பத்திரிகையாளர், எழுத்தாளர் பேச்சாளர் என பன்முகம்ொண்ட ‘நீயா? நானா?’ புகழ் திரு கே ா பிநாத் எழுதிய புத்தகம் தான் அது.
புத்தகத்தி பெயர் எதிர்மறையாக இருந்தாலும் உள்ளே உள்ள அத்துணை தலைப்புகளும் நேர்மறை ஆனவை. அனைவருக்கும் தேவையாவை. சக்தி அளிப்பவை. உணர்வுபூர்வமானவை. புத்தகத்தை பற்றி ொல்லும் முன் நூல்ஆசிரியர் பற்றி சில அரிய விடயங்களை ொல்லுவதே ஆகச்சிறந்ததாக இருக்கும். 2004 ல் இந்தியாவின் சிறந்த இளம்செய்தியாளர் 2006ல் இளம் சாதனையாளர் 2007ல் சிறந்த நிகழ்ச்சி ொகுப்பாளர் 2008ல் சிறந்த இளம் இந்தியர் என பல விருதையும் பெற்றார் நான் வியந்தசிறந்த படைப்பாளி.
தன்னம்பிக்கையின் நாயகன் திரு ோபிநாத் அவர்கள், இவர் எழுதிய ப்ளிஸ் இந்த புத்தகத்தை வாங்காதிங்க என்ற புத்தகத்தில் வெரும் 112 பக்கமே எழுதி 15 தலைப்புகளில் மட்டுமே படிக்க படிக்க ஆர்வமாக எளிமையாக எழுதி புரியவைத்தது மிகசிறப்பு. இந்த புத்தகத்தை அவர் சமர்ப்பணம் செய்தது அவருடைய அப்பாவுக்கு அதை கூட என்னையும் என் தன்னம்பிக்கையும் என்னை விட அதிகம் நம்பும் என் அப்பாவுக்கு என குறிப்பிட்டு உள்ளது உண்மையில் உத்தமம்.
முதல் தலைப்பிலே மகிழ்ச்சியான மனநிலையை பற்றி ஆணித்தரமாக ொல்லி இருப்பார். மகிழ்ச்சியாக இருக்க என்னசெய்ய வேண்டும் என்று கேள்வி கேட்டு சந்ோஷம் எதில் உள்ளது என்று வினவி மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற மனநிலையில் உள்ளது என்ற பிரபஞ்ச உண்மையை அழகாக எடுத்து உரைப்பார் ஒரு குருவை ோன்று.
11வது பக்கத்தில் கேவலம் டிபன் பாக்ஸில் உள்ள ஒரு உப்புமாவுக்கு நம் மகிழ்ச்சியை கெடுக்கும் வலிமை இருக்கும் என்றால் நம் மகிழ்ச்சி உணர்வு எவ்வுளவு பலகீனமாக உள்ளது என்பதை உணருங்கள் என்று அழமான அற்பூதமான விடயத்தை நாசுக்காக எழுதி உள்ளார்.
16 வது பக்கத்தில் சிரிப்பு வந்தால் சிரியுங்கள் நாளைக்கு அழுகை வந்தால் அழுது ொள்ளலாம் நாளைய சிரிப்பும் இன்றைய அழுகையும் மாறி மாறி வருவது தான் மனித வாழ்க்கை என்ற இயற்கை நியதியை அழகாக எடுத்து எழுதி உள்ளார். வாழ்கையை இனிமையாக மாற்றுவது எல் ோருக்கும் நல்லவனாக வாழ்வது முடியாத செயல் என்பது எல்லாம் சத்தியமான உண்மை. முதலில் நாம் நம்மை கவுரமாக பார்க்கவேண்டும் என்ற அன்புகட்டளை, நம் அகம் புறம்நேசிப்பை அழகாய்ொல்லி உள்ளார்.
ொள்கையில் மாறுபாட்டிற்கு உட்பட்டவை.பெர்பெக்ஷனிஸ்ட் ஆக விரும்பதே..அது நடைமுறையில் உதவாது என்பது நியாயமான உண்மை தானே. அன்புகாட்டுங்கள் ஆனால் எதிர்தரப்பு அன்பை எதிர்பார்த்து அன்பு காட்டாதீர்கள் அது வியாபாரம் என்று ொட்டில் அடித்தாற்ோல் எழுதி உள்ளார் அதற்கு எ.காட்டாக அழகான நாய் கதையும்ொல்லி இருப்பது மிக சிறப்பு.
கற்பனையில் கஞ்சத்தனம் வேண்டாம் மனதை ோடிஸ்வரனாக வைத்து ொள்ளுங்கள் என்று ொல்வதகெல்லாம் உண்மையில் ஒருஞானம் வேண்டும் உண்மையான அன்பு திரு ோபிநாத் அவர்கள் வரிகளில் அழகாக தெரிகிறது குறுகிய மனதை விட்டு ஓழிப்பது நமக்கு என்னவேண்டும் என்பதில் நிலையான உறுதிப்பாடு வேண்டும் என்பது ஆழ்மனதை நம்பி குறிக் ோளை உறுதிசெய்து ொல்லி பாருங்கள் என்பது எல்லாம் மனிதர்களுக்கு அற்பூத தாரக மந்திரமாக நான் உணர்கிறேன்.
பிறருடன் நம்மை ஒப்பிட கூடாது என்பதில் ெதளிவாக இருக்கவேண்டும் “எல்லாரையும் நம்புவதும் ஆபத்து, யாரையும் நம்பாமல் இருப்பதும் பேராபத்து” சிறந்த ெ பான்ொழிகள்.
மனிதனை எதிரியாக பார்க்கிறவன் கடவுளையும் எதிரியாக பார்க்கிறான் என்ற ஸ்லாட்டார் எழுதிய வரிகளை எழுதுவது மிக அற்பூதம்.
இழந்ததை நினைத்து புலம்பாமல் இருப்பது சிறப்பு அதற்கு உதாரணமாக ொன்ன கே எஃப் சி உருவான கதை அருமை .ஆயிரம்ொழிற்நுட்பங்கள் வர வைப்ோம் இந்தியன் யார் என்று புரிய வைப்ோம் என்றபாடல் வரிகள்ொல்லி அழகாக தனது 14 வது பக்கத்தில் தலைப்பை முடித்துவைத்துள்ளார் அன்பு ச ோ. பாராட்டுதை விரும்புங்கள் ,விமர்சனங்ளை ஏற்று ொள்ளுங்கள். எதிர்மறையாக பேசபவர்ளை தூர தள்ளிவையுங்கள் என்று உண்மை கருத்தை ொல்லி தனது கடைசி தலைப்பை நிறைவுசெய்துள்ளார் இந்த அற்பூத எழுத்தாளர்
இந்த புத்தகத்தை படித்து இரண்டு விடயங்கள் மட்டுமே எனக்கு உதிர்த்தது.
- இந்த புத்தகமே இவ்வுளவு நேர்மறையாகவும் தன்னம்பிகையாகவும் இருந்தால்
ோபிநாத் என்ற மனிதரின் நேர்மறை சிந்னை , தன்னம்பிகை எவ்வுளவு அதிகமாக இருக்கும் என்பதை நினைத்து நான் பெருமை அடைதேன். - அனைவரிடமும் கண்டிப்பாக இருக்க வேண்டிய அற்பூதமான புத்தகம்
புத்தகத்தின் தலைப்பை தவிரவேறு எங்கும் ஒருவார்தை கூட எதிர்மறை சிந்தனை இல்லை.
முன்னுரை முடிவுரை இல்லாத இந்த புத்தகம் எதிர்மறை சிந்தனைக்கு முடிவுரையாகவும் தன்னம்பிக்கைக்கு முன்னுரையாகவும் இருக்கும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
Writing is my passion. Lecturer by profession. Awarded as the Best Pavalar by Puduvai Tamil Kalai Mandram.
Be the first to comment on "Please Intha Puthakaththai Vangatheenga (Book Review in Tamil)"