ஒரு கறாரான ஜாதி திமிர் பிடித்த தந்தை தன் மகன் வேறு மதத்தில் ஒரு பெண்ணை திருமணம் செய்ததால் வீட்டை விட்டு வெளிய போக சொல்கிறார். 12 வருடங்கள் கழித்து அவர்க்கு ஹார்ட் அட்டாக் என்று கேள்விப்பட்டு அவரின் மகன்,மருமகள், பேரன் ஆகியோர் ஊருக்கு அவரை பார்க்க வருகிறார்கள்.ஒரு தமிழ் தெரியாத பேரன் இங்கிலீஷ் தெரியாத தாத்தா இவர்களின் இடைய நடக்கும் அன்பு,அறிவு பரிமாற்றமே தலைமுறைகள்.
தாத்தாவாக பாலுமகேந்திரா பேரனாக கார்த்திக் இருவரும் மிக அற்புதமாக நடித்து உள்ளனர். அதுவும் பாலுமகேந்திரா ஐயா மிக சிறப்பாக நடித்து உள்ளார். முக்கியமாக தன் மருமகள் கிராமத்தில் இருந்து மருத்துவசேவை செய்கிறேன்,உங்கள் மகனே இங்க தானே படித்தார் என் மகனும் இங்கயோ படிக்கட்டும் இது தான் அவங்க மக்கள் முக்கியமா உங்க பேரன் உங்க கூட வளரணும்னு சொல்லும்போது அவர் பார்க்கும் பார்வை கிளாஸ்.
தன் பேரனுக்கு தமிழ் தெரியாது என்று சொல்லும்போது தலையில் அடித்து கொண்டு என் பேரன்மா என் பேரன் என்று சொல்லும்போது நடிப்பால் நம்மை கலங்கு அடித்து விடுகிறார் அவர் முன்னேமே நடிக்க வந்து இருந்தால் தமிழ் சினிமாவிற்கு பல நேஷனல் அவார்ட் வாங்கி குவித்து இருப்பார்.படத்தின் இறுதி காட்சியில் சசிகுமார் அவரின் பேரனாக வந்து விருது வாங்குவார்.நிஜ வாழ்கையிலும் இந்த படத்திற்கு நேஷனல் அவார்டை அவர் பேரன் தான் வாங்கினார் என்பது காலத்தின் மிக மோசமான விளையாட்டு…
After a career spanning over four decades in the film industry, renowned filmmaker Balu Mahendra, marks his acting debut in Thalaimuraigal.
Your mother is a christian,Your father is a Hindu, who are you? அதற்கு அந்த சிறுவன் I am Aathi என்று சொல்லும்போது மதம் தேவையில்லை உன் சுயம் இருக்கும்போது என்று மிக எளிமையாக வசனத்தில் புரிய வைக்கிறார். அடுத்து படத்தின் பின்னணி இசை ராஜாவை பற்றி சொல்லவே வேண்டாம். ராஜா படத்திற்கு தேவையான இடங்களில் மிக சிறப்பாக காட்சிகளை உள்வாங்கிகொண்டு உயர்தரமான இசையை அமைத்து இருக்கிறார்.
அடுத்த பாலுமகேந்திரா நாம் தொலைத்த அனைத்து விஷயங்களையும் இப்படத்தில் அழகாக எடுத்து உரைத்து உள்ளார். பணத்திற்கு ஆசைப்பட்டு இயற்கையை கொண்டாடாமல் விட்டதை, ஜாதி ஒழிப்பு,மதநல்லிணக்கம்,கிராமபுறங்களில் மருத்தவமனையின் தேவை,ஆங்கில மோகத்தில் தமிழை படிப்பதை விட்டதை இது போல பல சமூகத்திற்கு தேவையான விஷயங்களை சொல்லி இருக்கிறார்.இயற்கையின் அழகை படம் எங்கும் அழகான காட்சிகளை காட்டி கொண்டு இருக்கிறார்.
The film features music composed by Ilaiyaraaja.
படத்தில் தன் பேரனுக்கு மட்டும் அல்ல நமக்கும் வாழ்க்கைமுறையை,தமிழின் பெருமையையும் அழகாக கற்று தருகிறார் பாலுமகேந்திரா.நாம் தொலைத்த வாழ்க்கைமுறையை குருவியின் கானங்கள்,பறவைகளின் சத்தங்கள் என்று படம் முழுக்க பின்னணியில் ஒலிக்க விட்டு வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள் என்று கூற நினைக்கிறார் பாலுமகேந்திரா.இப்படத்தின் பல இடங்களில் கண்களில் இருந்து கண்ணீர் என்னை அறியாமல் வந்தது. ஒரு நெகழ்ச்சியான காவியம் தான் இந்த தலைமுறைகள்……
பாலுமகேந்திரா அய்யாவின் கடைசி படம். தமிழ் மக்களுக்கு அவர் விட்டு சென்ற பொக்கிஷமே இந்த தலைமுறைகள்.படத்தின் இறுதியில் அவர் சொல்வதை போல நாங்கள் தமிழையும் மறக்க மாட்டோம் உங்களையும், உங்களின் படங்களையும் என்றும் மறக்க மாட்டோம் ஐயா.
review by Sarath Babu
Be the first to comment on "Thalamuraigal (Review)"