ரஜினி சார் அடுத்து என்ன படம் பண்ணபோறாங்கனு யோசிச்சுட்டு இருக்கும் போது தான் பா.ரஞ்சித் சார் கூட ஒரு படம் பண்ண போறதா அறிவிப்பு வந்துச்சு, அவர் இயக்கிய அட்டகத்தி காதல் கதையாகவும் மெட்ராஸ் சாமுதாய ரீதியான படங்களாகவும் இருந்தது. பா.ரஞ்சித் புது இயக்குனர் ஆச்சே இரண்டு படம் தான் இயக்கி இருக்கிறார்,அவர் எப்டி சூப்பர்ஸ்டாரை வைத்து இயக்க போறாங்கனு பெரிய சிந்தனை வந்துச்சு. கொஞ்ச நாட்களில் படத்துக்கு டைட்டில் காபலி னு வைக்குரதா படக்குழுவினர் சொன்னாங்க.
கபாலி டைட்டில் கேட்டதும் முதல் சிரிப்புத்தான் வந்துச்சு.. ஏன் இப்டி ஒரு டைட்டில் னு யோசிக்கும் போது.. காபலி முதல் பார்வை போஸ்டர் வெளிவந்துச்சு, போஸ்டர் பார்க்கும் போது அது எதோ புரட்சிகரமான படமா இருக்க போகுதுனும், படத்தில் ரஜினி சார் கேரக்கடர் பெயர் காபலிஸ்வரன் னு தெரிய வந்தது.. படம் முழுவதும் மலேசிய ல சூட்பண்ண போறதாகவும், அதற்கு ரஞ்சித் லொக்கேஷேன் எல்லாம் பார்த்துட்டு வந்தாச்சுனும் சொன்னாங்க.
ரஞ்சித் மெட்ராஸ் படத்துல வொர்க் பண்ண அதே படக்குழுவினர். அதே சக நடிகர்களும் நடிக்குராங்கனு தெரிய வந்தது. ரஞ்சித் எப்படி பண்ண போறார் நினைக்கும் போது, புரொடியுசர் தானு தான் தயாரிப்பாளர் அவர், படத்துக்கு எப்டி செலவு செய்ய வேண்டும் என்ற கணக்கில் அனுபவம் மிக்கவர், ரஜினி சார் சீன்ஸ் எல்லாம் சூட் பண்ணியச்சு மீதி படப்பிடிப்பகளே மிச்சம் இருக்கிறது என்று தகவல் வர, சூப்பர் ஸ்டாரும், கலை புலி தானு அவர்களும் சேர்ந்து தான் ரஞ்சித் சொன்ன கதையைகேட்டுள்ளானர். ரஞ்சித் கதை சொல்லி முடித்ததும் தானு ரஞ்சித்தை கட்டிப்பிடித்து பாராட்டியதாகவும், இது உங்கள் படமாக எடுங்கள் எந்த தயக்கமும் வேண்டாம். என்று சூப்பர்ஸ்டார் ரஞ்சித் அவர்களிடம் கூறியதாக சினிமா வட்டாரங்கள் சொல்கின்றன.
தானு அவர்கள் முதல் டீசர் யூடூபில் வெளியிட பரபரப்பாக பார்க்க பட்டு பல கோடி பார்வையாளர்கள் கண்ட டீசர் என்று சாதனையும் படைத்தது,
நெருப்புடா நெருங்குடா என்ற வரிகள் பிரபலமாக ஒலித்து கொண்டு இருக்க.. அடுத்ததாக அந்த பாடல் டீசரையும் யூடூபில் வெளியிட்டார் தானு.. பாடல் டீசரும் நல்ல வரவேற்பை பெற ஆரம்பித்தது.. கபாலி பாடல்கள் கேட்க கேட்க பிடிக்க ஆரம்பித்தது.. உலகம் ஒருவனுக்கா பாடல் தொடக்க பாடல் என்றும் வீர துரந்தரா பாடல் முதலில் கேட்டதை விட கேட்க கேட்க பிடித்தது.. மாயநதி பாடல் லவ் மெலோடி நன்றாக இருந்தது… நெருப்புடா பாடல் ஆரம்பம் முதலே மனதில் ஆணிதனமாக பதிந்த பாடல்… படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கியது..! தானு அவர்கள் தன் படத்தை விளம்பரத்தை மலேசியாவில் இருந்து பட்டிதொட்டி வரை கொண்டு சேர்க்க வேண்டும் எண்ணி அதையும் சிறப்பாக செய்தார். ஏர் ஏசியா விமானத்தில் கபாலி விளம்பர போஸ்டர் மற்றும் ஏர்டெல் விளம்பரங்கள் என கபாலியின் விளம்பரங்கள் மாஸ் ஆக இருந்தது.
படம் வந்தபிறகு
கபாலி படத்தை பார்த்த பிறகு சூப்பர்ஸ்டார் நடித்துல்லார் என்பதை விட அவருக்கு இணையாக கதை,திரைக்கதை, வசனம், இசை, பிண்ணனி இசை, பாடல்கள், பாடல்களின் வரிகள், இவை அனைத்தும் சரியா அமைந்திருந்தது என்று படம் பார்த்த பிறகே தெரிந்தது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் மலேசிய போலீஸ்ரால் சொல்லப்படும் டான் கபாலியின் கதைகள் அமைத்தவிதம் ஹாலிவுட்க்கு இனையாக இருந்தது.
கபாலி ஜெயில் இருந்து கிளம்பும்போது வரும் ஓப்பனிங் பிண்ணனி இசை சிலிர்க்க வைக்கிறது. ரஜினி சார் நடிச்ச படதுல கபாலில தான் அவருடைய வயசுக்கு தகுந்த மாதிரி நடிச்சிருக்கிறார் .சண்டை சீன் ஆகட்டும் டான்ஸ் ஆகட்டும் அவரது வயதுக்கு ஏத்ததுபோலவே அமைத்து இருப்பது தான் இந்த படத்தின் தனி சிறப்பு. ரஜினி அவர்கள் தன் வெள்ளை தாடியில் கோர்ட் சூட் போட்டு நடந்து வரும் போது ஒரு சிங்கத்தின் தோற்றத்தை போல் அமைந்திருப்பது மேகப், மற்றும் உடை வடிவமைப்பாளரின் கலை ரசனை மிக சரியாக அமைந்தது.
படத்தின் திரைக்கதை அமைந்த விதம் பிரமாதமாக இருந்தது… ஜெயிலிருந்து வெளியேவந்து தன் எதிரிகளில் ஒருவனை தேடி சென்று அடிக்கும்போது பிண்ணனி இசையில் பறவைகளின் நிலையில் இருந்து பார்க்கும் கண்ணொட்டத்தை.. அந்த பறவைகளின் கூச்சலில் இருந்து பிண்ணனி இசை மூலம் கதையின் உணர்வை புரியவைத்திருக்கிறர் இயக்குனர். எதிரிகளை அடித்து விட்டு “நான் திரும்பி வந்துட்டேனு சொல்லு” சொல்லும் போது அடைப்பட்ட கூண்டில் இருந்து பறவை சுதந்திரமாக வெளியே வருவது போல் திரைக்கதை அமைத்தது சூப்பர். தன் மனைவியை பழயை வீட்டிற்கு தேடி போகும் போது இரவிலிருந்து பகல்நேரத்திற்கு மறுவதை ஒளிப்பதிவாளர் ஜி.முரளி அவர்கள் சிறப்பாக காட்டியிருக்கிறார்…
தன் மனைவியை தேடி போகும் போதெல்லாம் ஒரு பிண்ணனி இசை அந்த கதாபாத்திரத்தில் நாம் இருப்பது போலவே கற்பனை செய்யவைக்கிறது.
எதிரி மகளிடமே தந்தையை கொல்ல சொல்லுவது போன்ற திரைக்கதை அமைத்து மற்றும் தன் அப்பாவை பார்த்தவுடன் தன்ஷிக்கவின் நடிப்பு பிண்ணனி இசையுடன் சேர்த்து கண் களங்க வைத்துவிடுகிறது.. அந்த சீன் மலேசியாவில் எடுக்கமுடியாது என்பதால் கலை இயக்குனர் டி.ராமலிங்கம் அவர்கள் மலேசியா தெருக்களை போன்றே சென்னையில் செட் போட்டு… அதே மக்களை சென்னைக்கு கொண்டு வந்து எதார்தமாக லட்டிங் செய்து ஒளிபதிவு செய்தது அற்புதம். ஜி.முரளி ஒளிப்பதிவாளரின் ஒளி பதிவும், இசை அமைப்பாளரின் பிண்ணனி இசையும், இயக்குனரின் திரைக்கதையும் படத்தை பிரமிப்பின் உச்சத்துக்கே கொண்டு செல்கிறார்கள்.
பாடல் வரிகளில் இருக்கும் புதுமை,இசை மற்றும் பிண்ணனி பாடகர்கள் கானா பாலாவின் குரலில் கபிலன்,விவேக்,ரோஷன் ஜாம்ராக் இவர்களின் வரிகளில் உலகம் ஒருவனுக்கா பாடல் கானா பாடலாக இல்லாமல், வித்தியாசமாக பாடல் பாடி இருப்பது. முதல் பாடலில் வரும் ரஜினியின் அந்த மாஸ் லூக்ஐ ஒளிப்பதிவாளர் திறன்பட ஒளிப்பதிவு செய்திருக்கிறார். மாய நதி பாடல் உமாதேவி அவர்களின் பாடல் வரிகளில் வரும் வார்த்தைகள் புதுமையாகவும்,ஆனந்த் மற்றும் பிரதீப்குமார்,ஸ்வேதா மோகன் இவர்களின் பிண்ணணி குரல் திரையில் பார்க்கும் போது ஒரு மகிழ்ச்சி கலந்த இன்பத்தை கொடுக்கிறது. மாய நதி பாடல் ஒளிப்பதிவு மற்றும் லைட்டிங் செய்த விதம் பாராட்டுக்குரியது. வீர துரந்தரா பாடலில் வரும் வரிகள் மிகவும் நுண்ணியமாக கவனிக்க கூடிய வார்த்தைகளை பயன்படுத்தி இருக்கிறார்கள் உமாதேவி மற்றும் ரோஷன் ஜெம்ராக். அந்த பாடலில் வரும் பிண்ணனி கேட்க கேட்க குரல் ரசிக்க வைப்பதாக இருந்து.
தன் மனைவி மற்றும் குழந்தைகள் உயிரோடு இருக்கிறார்களா என்று தெரியாமல் அவர்கள் தேடி போது வரும் பாடல் “வானம் பார்த்தேன்” இந்த பாடல் கபிலனின் வரிகளில் பிரதீப்குமார் அவர்களின் பிண்ணனி குரலில் அந்த கதாபாத்திரத்துடன் ஒன்றி போகும் அளவுக்கு சோகமான குரலில் முனுமுனுக்க வைக்கும் அளவிற்கு பாடியுள்ளார். நெருப்புடா பாடல் அருண்காமராஜ் ன் வரிகளில் அவரே பிண்ணனி பாடி காபலி என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்றார் போல் ஒரு வெறித்தனமான பாடலை பாடிஇருக்கிறார்.
கிளைமாக்ஸ் ல் காண்பிக்கபடும் டவர் செட் என்றாலும் அது தெரியாமல் VEX மூலம் ஒளிப்பதிவு மற்றும் லட்டிங் செய்து கொடுத்த ஜி.முரளி மற்றும் டி.ராமலிங்கம் அவர்களின் மெனக்கெடல் திரையில் பார்க்கும் தெரிகின்றது. படகுழுவினரின் உழைப்பு மற்றும் கலை கபாலியை உலக தரத்திற்கு கொண்டு சென்றுள்ளது. காபலியின் நேர்காணல் மூலம் சொல்லப்படும் ஒவ்வொரு எதிரிகளின் அறிமுகம் சொல்லப்படுவது போன்று திரைக்கதை அமைத்து, பா.ரஞ்சித் அதில் வெற்றியும் பெற்று உள்ளார், வெளிநாட்டில் சென்று வாழும் தமிழர்களின் ஏற்படும் கொடுமைகள் மற்றும் தமிழனுக்கு தமிழன் தான் எதிரி என்ற நிலைமையை தன் வசனங்களின் மூலம் சொல்லப்பட்டிருக்கும் விதம் அருமை.
(BGM) பிண்ணனி இசையின் மூலம் கட்சிளுக்கு உயிர்கொடுத்திருக்கும், இசை அமைப்பாளரின் பங்கு பாரட்ட தக்கது… ஹாலிவுட் படத்திற்கு நிகறான
டிஜிட்டல் சவுண்ட் மற்றும் சரவுண்ட் ஒலி களை நாம் தியேட்டரில்
உட்கார்ந்து பார்க்கும் போது தான் உணர முடிகிறது. ரஜினி சார் அவர்கள் தன் மனைவியை பற்றி யோசிக்கும் போதெல்லாம் வரும் பிண்ணனி இசையின் தாக்கம் தியேட்டரை விட்டு வெளியே வந்த பிறகும் நம் மனதில் ஆழமாக பதிந்து இருக்கிறது.. இரண்டு நாட்கள் அந்த தாக்கம் இருக்கும் அளவுக்கு ராதிகா ஆப்தே அவர்களின் நடிப்பு அருமையாக இருந்தது. ரஜினி சார் அவர்களின் இயல்பான நடிப்பு 80 களில் நாம் பார்த்த ரஜினியை நினைவுப்படுத்துகிறது. படத்தில் துணை நடிகர்கள் அட்டகத்தி திணேஷ்,கலையரசன்,ஜான்விஜய் இவர்களின் நடிப்பு எதார்த்தமாகவும் ரசிக்கும் தன்மையிலும் அமைந்திருந்தது படத்திற்கு மேலும் விருவிருப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
படத்தில் தேவையான காட்சிகளை படத்தொகுப்பு செஞ்சு பிரவீன் அவர்களின் எடிட்டிங் திரைக்கதையின் சுவாரசியத்தை அதிகப்படுத்தி இருக்கிறது. கபாலி அரசியல் படமாகவோ அல்லது தனிப்பட்ட ஒருவரின் படமாகவோ பார்க்காமல்
படத்தில் இருக்கும் கலை, காட்சிகள் அமைத்த விதம், ரஜினி,ராதிகா, தன்ஷிக்க மற்றும் சக நடிப்பு, பிண்ணனி இசை, போன்றவற்றை ரசிக்கமல் நீங்கள் இருந்திருந்தால் மீண்டும் ஒரு திரையரங்கிற்கு சென்று ரசித்து பாருங்கள்.
மகிழ்ச்சி..!
Writer
Be the first to comment on "நான் பார்த்த கபாலி | An Analysis of Pa. Ranjith’s Kabali"